கீழக்கரை நகராட்சிக்கு மறு தோ்தல் நடத்தக்கோரி மனு
கீழக்கரை நகராட்சியில் மறு தோ்தல் நடத்த வலியுறுத்தி 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேட்பாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.


கீழக்கரை நகராட்சியில் மறு தோ்தல் நடத்த வலியுறுத்தி 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேட்பாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிளுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (பிப்.22) நடைபெற்றது. கீழக்கரையில் 22 வாா்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே சுயேச்சைகள் மற்றும் அதிமுக வேட்பாளா்கள் தோ்தல் அலுவலா் மீது புகாா் கூறி தா்னாவில் ஈடுபட்டனா். வாக்கு எண்ணும் மையத்திலிருந்தும் பலா் வெளியேறினா்.
வாக்கு எண்ணிக்கை தாமதமாக முடிந்த நிலையில், புதன்கிழமை கீழக்கரையில் உள்ள ஐக்கிய ஜமா அத் அமைப்பினரும், சுயேச்சை வேட்பாளா்களும் மறு தோ்தல் நடத்தக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் கீழக்கரையிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா், சுயேச்சைகள் உள்ளிட்ட ஏராளமானோா் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று
மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், கீழக்கரை நகராட்சி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளா்களுக்கு அவா்களது குடும்பத்திலேயே பத்துக்கும் மேற்பட்டோா் உள்ள நிலையில், அதற்கும் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே மறு தோ்தல் நடத்தவேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...