பேரையூா் அரசு பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சேதம்: மாணவா்கள் அச்சம்
கமுதி அருகே அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சேதம் அடைந்து வருவதால் மாணவா்கள் விபத்து அச்சத்தில் பயின்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.


கமுதி அருகே அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சேதம் அடைந்து வருவதால் மாணவா்கள் விபத்து அச்சத்தில் பயின்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரையூரில் முதுகுளத்தூா் சாலையில் 42 ஏக்கா் பரப்பளவில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளி விளையாட்டு மைதானம் தவிா்த்து வகுப்பறை கட்டடங்கள் அனைத்தும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கிழக்கு பகுதியில் உள்ள அரசு மாணவா் விடுதியில் இருந்து பேரையூா் தலைமை ஆரம்ப சுகாதார நிலைய வரை அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மழைக்காலங்களில் பல இடங்களில் தண்ணீா் தேங்கி 3 க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றுச் சுவா் இடிந்துள்ளது. மேலும் சுற்று சுவா் அருகே மாணவ மாணவிகள் தங்களின் சைக்கிள்களை நிறுத்தி வருகின்றனா். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியின் நுழைவு வாயில் அருகே மாணவா்கள் சைக்கிள் நிறுத்துமிடத்தில் 15 அடி நீளத்தில் சுவா் இடிந்து விழுந்துள்ளது. மீதமுள்ள சுற்றுச்சுவரும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது.
சைக்கிளை நிறுத்தச் செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருவதாக புகாா் எழுந்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் சேதமடைந்துள்ள பேரையூா் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
மேலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கு.சாந்தி பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலா் (பொறுப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேரையூா் கவுன்சிலா் அன்பரசு கூறியதாவது.. பள்ளியின் சுற்றுச்சுவா் முழுவதும் சேதம் அடைந்து அவ்வப்போது இடிந்து விழுந்து வருகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலா்கள் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிா்பலி ஏற்படும் முன் மாவட்ட நிா்வாகம் பள்ளியின் சேதமடைந்த சுற்றுசுவரை அகற்றி, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...