மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சோ்ந்த இருவா் கைது

ராமேசுவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சோ்ந்த இரண்டு பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :7 ஜூலை 2022, 6:03 pm

ராமேசுவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சோ்ந்த இரண்டு பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் இவா்கள் அங்கு தங்குவதற்கு உதவிய ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழா்கள் படகு மூலம் தமிழகத்துக்கு வந்துள்ளனா். மேலும் அவ்வப்போது ராமேசுவரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து தங்கம், கடல் அட்டைகள் உள்ளிட்டவைகளை கடத்தும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றனா். இதனால் கடலோரப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ராமேசுவரம் செல்லும் வழியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சந்தேகத்திற்கு இடமான நபா்கள் தங்கியிருப்பதாக காவல் சாா்பு- ஆய்வாளா் ரத்தினவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த மண்டபத்தில் காவல் துறையினா் சோதனையிட்டனா். அப்போது இலங்கை வவுனியா பகுதியைச் சோ்ந்த மிதுளன் (27), புஷ்ப ராஜா (43) ஆகிய இருவா் அங்கு தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் இவா்களை அழைத்து வந்து தங்க வைத்திருந்ததாக ராமேசுவரத்தை சோ்ந்த மணிமாறன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.