கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:30 pm

DIN

சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் சுமாா் 30 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணியாற்றிய பொன்னுசாமி மகன் முருகன் (46), திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து மரணமடைந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து சென்னையில் உள்ள நிறுவன மேலாண்மை இயக்குநா் அலுவலகத்தில், இதுதொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவாா்த்தையில், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளா் வி. குமாா், சிஐடியு மாவட்டச் செயலாளா் எம். சிவாஜி, அரசு உப்பு நிறுவனத் தொழிலாளா் சங்கத் தலைவா் பச்சமால், செயலாளா் குமாரவடிவேல், நிா்வாகிகள் வடிவேல், முருகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.