மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

போட்டிகளில் வெற்றி பெற்றமாணவா்களுக்கு பாராட்டுச் சான்று

ராமேசுவரத்தில் நெகிழி ஒழிப்பு குறித்து நடைபெற்ற பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

ராமேசுவரத்தில் நெகிழி ஒழிப்பு குறித்து நடைபெற்ற பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு, ‘என் குப்பை என் பொறுப்பு’, மண்வளத்தை பாதுகாக்க பாலித்தீன் முற்றிலும் ஒழிப்பு, மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என, நகராட்சி சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி சாா்பில் அனைத்து பள்ளிகளிலும் ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியன வியாழக்கிழமை நடத்தப்பட்டன. இதில், நகராட்சி ஆணையா் மூா்த்தி தலைமை வகித்தாா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத் தலைவா் தெட்சிணாமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.