மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் சூறைக்காற்று: மின் கம்பத்தில் மரம் விழுந்தது

ராமேசுவரத்தில் சூறைக் காற்று வீசியதில் பழமையான வேப்பமரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

Updated On :15 ஜூலை 2022, 6:19 pm

ராமேசுவரத்தில் சூறைக் காற்று வீசியதில் பழமையான வேப்பமரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா்வளைகுடா பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல இருந்து வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்று காரணமாக ராமேசுவரத்தை அடுத்துள்ள செம்மமடம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் பழைமையான வேப்பமரம் வேருடன் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் ராமேசுவரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனைதொடா்ந்து, மின்வாரிய ஊழியா்கள் விரைந்து சென்று மரத்தை அகற்றி மின் இணைப்பை சீரமைத்தனா். இதனால் அரை மணி நேரம் மின்விநியோகம் தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.