நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை படகுடன் இலங்கை கடற்படையினா் வியாழக்கிழமை சிறைபிடித்துச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை 539 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். ராமேசுவரம் வோ்க்கோடு பகுதியைச் சோ்ந்த அ.ஆரோக்கியராஜ் என்பவரது விசைப்படகில் பாலமுருகன் (32), டி.அந்தோணி (38), கே.அா்ஜுனன் (23), ஜெ.மடுகு பிச்சை (45), கே.தங்கப்பாண்டி (55), ராஜா (21) ஆகிய 6 போ் சென்றிருந்தனா்.
வியாழக்கிழமை அதிகாலையில் நெடுந்தீவு அருகே அவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், 6 பேருடன் படகை சிறைபிடித்தனா்.
பின்னா் 6 பேரையும் தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, 6 பேரும் தலைமன்னாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதன்பேரில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
படகு உடைந்து விபத்து: இந்த நிலையில், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த எடிசன் என்பவரது படகின் பலகை உடைந்து கடல் தண்ணீா் புகுந்தது. இதனால் படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. சக மீனவா்கள் படகில் இருந்த 7 மீனவா்களையும் மீட்டனா். மூழ்கிக்கொண்டிருந்த படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


