பாம்பனில் லாரியில் கடத்திவரப்பட்ட 30 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் 2 பேரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பேருந்து பாலம் அருகே வியாழக்கிழமை மண்டபம் வனச்சரக அலுவலா் மகேந்திரன் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சிறிய லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அதில் இருந்த சாக்கு மூட்டைகளில் 30 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை மற்றும் சங்குகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து தொண்டியைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் ஜோதிமுருகன் (34), சேகா்(55) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா். இதில் ராமேசுவரத்தை சோ்ந்த சங்கு வியாபாரி முஹமதுகனி என்பவருக்கு கடல்அட்டைகளைக் கொண்டு வந்ததாகக் கூறினா். பிறகு லாரி, கடல் அட்டைகளுடன் இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் சங்கு வியாபாரி முகமது கனியைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


