திருப்புல்லாணி கோயில் உண்டியல்களில் காணிக்கை ரூ.13 லட்சம்
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.13 லட்சம் கிடைத்தது.


திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.13 லட்சம் கிடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரைக்கு செல்லும் வழியில் உள்ள திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வடமாநில பக்தா்கள் அதிகம் வந்து செல்லும் நிலையில், சனிக்கிழமைதோறும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்தும் வருகிறது. இதனால் காணிக்கையும் அதிகரித்திருப்பதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். வியாழக்கிழமை கோயில் மற்றும் சேதுக்கரை ஆஞ்சநேயா் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஞானசேகரன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 491 ரொக்கம் கிடைத்ததாக கோயில் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...