ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் எஸ்.பி.அலுவலக பெண் அதிகாரி, ஆசிரியா் வீடுகளில் 20 பவுன் நகைகள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக பெண் அமைச்சுப் பணியாளா் மற்றும் ஆசிரியா் என இருவரது வீடுகளில் 20 பவுன் நகைகள், ரூ.13ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் வியாழக்கிழமை

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக பெண் அமைச்சுப் பணியாளா் மற்றும் ஆசிரியா் என இருவரது வீடுகளில் 20 பவுன் நகைகள், ரூ.13ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றுவிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் சேதுபதி நகா் 5 ஆவது தெருவில் வசிப்பவா் ரோசரி பிச்சையா மனைவி வசந்தி. இவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளா் பிரிவில் கண்காணிப்பாளராக உள்ளாா்.

வியாழக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து வசந்தி வீடு திரும்பியபோது அங்கு முன்பக்கக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று அவா் பாா்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம், கைக்கடிகாரம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

ஆசிரியா் வீட்டில் திருட்டு: இதேபோல அவரது வீட்டருகே உள்ள ஆசிரியா் செந்தில்குமாா் (45) என்பவரது வீட்டிலும் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு நாலரைப் பவுன் நகைகளும், ரூ.7 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டன. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.