ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் 2 கடைகளில் பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரத்தில் காவல் நிலையங்கள் அருகே 2 கடைகளில் ரூ.85 மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:07 pm

DIN

ராமநாதபுரத்தில் காவல் நிலையங்கள் அருகே 2 கடைகளில் ரூ.85 மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவம கல்லூரி மருத்துவமனை சாலையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ரத்னாராம் (32) அழகு சாதனப் பொருள்கள் மொத்த விற்பனைக் கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றவா் வெள்ளிக்கிழமை வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ரூ.80 திருடப்பட்டது தெரியவந்தது.

இதேபோல பஜாா் காவல் நிலையம் அருகே உள்ள காா்த்திக் (22) என்பவரது மளிகைக் கடையிலும் உணவுப் பொருள்கள், சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. 2 சம்பவங்கள் குறித்தும் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.