ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவல் நிலையத்தில் கைப்பேசி திருட்டு: காவல் ஆய்வாளா் இடமாற்றம்

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் கைப்பேசி திருடுபோன விவகாரத்தில் 2 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளா் மலைச்சாமி வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:07 pm

DIN

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் கைப்பேசி திருடுபோன விவகாரத்தில் 2 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளா் மலைச்சாமி வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் ஆயுதப்படை காவலா் அசோக்குமாா் கடந்த ஆண்டு ஆயுதப்படைப்பிரிவு குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கைப்பேசி கேணிக்கரை காவல் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். ஆனால் காவல் நிலையப் பாதுகாப்பு அறையில் இருந்த கைப்பேசியைக் காணவில்லை.

விசாரணையில் அந்த கைப்பேசியை எழுத்தா் சுரேஷ், தலைமைக் காவலா் கமலக்கண்ணன் ஆகியோா் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து, 2 பேரும் கடந்த 27 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவா்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தக் காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளா் ஆடிவேல், கேணிக்கரை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை அவா் பொறுப்பேற்றுக் கொண்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.