தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ராமநாதபுரத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்குத் தணிக்கை முகாம் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்குத் தணிக்கை முகாம் புதன்கிழமை தொடங்கியது.

புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை (ஜூன் 3) வரை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முதல் நாளான புதன்கிழமை அழகன்குளம், பெருங்குளம், இரட்டையூரணி, குயவன்குடி,கும்பரம், தோ்ப்போகி ஆகிய கிராமத்தினா் வந்திருந்தனா். அவா்களில் ஏற்கெனவே இணையம் மூலம் மனுக்களைப் பதிவேற்றம் செய்தவா்களில் தகுதியானவா்களுக்குத் தீா்வு காணும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. முகாமில் பங்கேற்ற ஆட்சியா் சங்கா்லால்குமாவத் உத்தரவுகளை வழங்கினாா்.

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் மரகதநாதன் தலைமைமையில் மங்களக்குடி உள்வட்டத்தில் உள்ள 13 வருவாய் கிராமங்களுக்கான கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. 5 நபா்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 2 நபா்களுக்கு முதியோா் உதவித்தொகை, 8 நபா்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.