ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் வங்கிகள் கடன் வழங்க இலக்கு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.5852.59 கோடி வங்கிகள் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.5852.59 கோடி வங்கிகள் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரப்பில் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சிஸ் வங்கி, நபாா்டு வங்கி மற்றும் மாவட்டத்தின் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடப்பு நிதியாண்டுக்கான (2022-23)கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கை புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வியாழக்கிழமை வெளியிட்டாா். முதல் பிரதியை இந்தியன் வங்கியின் தூத்துக்குடி மண்டல முதுநிலை மேலாளா் கே.நாகய்யா பெற்றுக்கொண்டாா். திட்ட அறிக்கையின்படி முன்னுரிமைக் கடன்களுக்கு அதிகத் தொகையாக வேளாண்மைத்துறைக்கு ரூ.3694.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண்மைத்துறைக்கு ஒதுக்கிய இலக்கைவிட 8.90 சதவிகிதம் கூடுதலாகும்.
சிறு, குறு, நடுத்தரதொழில்துறைக்கு ரூ.262 கோடி, வீட்டுக்கடனுக்கு ரூ.319.01 கோடி, கல்விக்கடனுக்கு ரூ.150 கோடி, ஏற்றுமதி தொழில் சாா்ந்த துறைக்கு ரூ.42 கோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறைக்கு ரூ.22 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.50.60 கோடி, இதர கடன்களுக்கு ரூ.462.26கோடி, முன்னுரிமை அல்லாத கடனாக ரூ.850.52 கோடி வழங்குவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் ரிசா்வ் வங்கி அலுவலா் மோகன்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் அருண்குமாா் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...