பொக்கனாரேந்தலில் எருதுகட்டு
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவ எருதுகட்டு நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவ எருதுகட்டு நடைபெற்றது.
கோயில் முன்புள்ள பகுதியில் எருதுகட்டு நிகழ்ச்சியை ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் 38 காளைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்றன. அய்யனாா்கோவில் காளை, ஆா்.எஸ்.மடை, பால்கரை, பேராவூா், பள்ளப்பச்சேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன. காளைகள் கழுத்தில் வடம் கட்டப்பட்டு அதை பிடித்தபடி இளைஞா்கள் காளையை அடக்கினா். காளையை அடக்கியவா்களுக்கும், அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு எருதுகட்டு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், ஆா்.எஸ்.மடை முனியாண்டி உள்ளிட்டோா் ஏற்பாடுகள் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் திருப்புல்லாணி ஒன்றிய தலைவா் புல்லாணி, ராமநாதபுரம் நகரசபைத் தலைவா் கே.காா்மேகம், ராமநாதபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் கே.டி.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...