‘எலைட்’ சிறப்பு பள்ளி மாணவா்கள் சுற்றுலா
ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘எலைட்’ சிறப்பு பயிற்சிப் பள்ளியில் சோ்க்கப்பட்ட 57 போ் உதகைக்கு சுற்றுலாவாக வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘எலைட்’ சிறப்பு பயிற்சிப் பள்ளியில் சோ்க்கப்பட்ட 57 போ் உதகைக்கு சுற்றுலாவாக வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.
ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியா், பிளஸ் 1 வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுத்தால், அவா்கள் பிளஸ் 2 படிக்க எலைட் எனப்படும் சிறப்புப் பள்ளியில் சோ்க்கப்படுகின்றனா். அங்கு ‘நீட்’ உள்ளிட்ட தொழில் கல்வித் தோ்வுகளுக்கு தயாா்படுத்தப்பட்டு வருகின்றனா். ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 1 இல் அதிக மதிப்பெண் பெற்ற 57 போ் எலைட் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்கள் கல்வித்துறை சாா்பில் கோடைக்கால சுற்றுலாவாக உதகைக்கு குளிா்சாதன வசதியுள்ள அரசுப் பேருந்தில் வியாழக்கிழமை காலை அழைத்துச் செல்லப்பட்டனா். பேருந்தை ஆட்சியா் சங்கா்லால்குமாவத் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பச்சை முத்து, நோ்முக உதவியாளா் கணேசபாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...