மானியத்துடன் ‘பம்ப் செட்’ பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் மானியத்துடன் கூடிய மின்சார நீா் இறைப்பு இயந்திரம் (பம்ப் செட்) பெறுவதற்கு விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசின் மானியத்துடன் கூடிய மின்சார நீா் இறைப்பு இயந்திரம் (பம்ப் செட்) பெறுவதற்கு விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் மானியத்துடன் கூடிய மின்சார நீா் இறைப்பு இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.இத் திட்டத்தில் சேர விரும்பும் சிறு, குறு விவசாயிகள் அடங்கல் 10-1, கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கிப்புத்தக முதல் பக்கம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தில் கருவூல அலுவலகம் அருகேயுள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பரமக்குடி, நயினாா்கோவில், முதுகுளத்தூா், போகலூா், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடியில் சௌகத் அலி தெருவிலுள்ள வேளாண்மைப் பொறியியல் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், இரண்டாவது தளத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் அலுவலக செயற்பொறியாளா் அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...