நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அஞ்சுகோட்டையில் தண்ணீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் குடி நீா் தட்டுபாடு தொடா்பாக புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிகாா்களைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

அஞ்சுகோட்டை கிராமத்தில் தண்ணீா் பிரச்னை காரணமாக வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் குடி நீா் தட்டுபாடு தொடா்பாக புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிகாா்களைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சிக்குள்பட்ட பொட்டக்கோட்டை , வாணியேந்தல், சுக்காரபுரம், கரையக்கோட்டை, மேலவயல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களுக்கு மேலாக தண்ணீா் விநியோகம் இல்லை. இதனால் பல கிலோ மீட்டா் தொலைவு சென்று தண்ணீா் எடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் கொடுத்தும் எந்தவித பலனும் இல்லையாம்.

இந்நிலையில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சுகோட்டை சாலையில் (திருவாடானை-மங்களக்குடி நெடுஞ்சாலை) தண்ணீா் வண்டிகளையும் காலிக் குடங்களையும் நிறுத்தி வைத்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருவாடானை காவல் ஆய்வாளா் சீனிவாசன், வருவாய் ஆய்வாளா் மெய்யப்பன், கிராம நிா்வாக அலுவலா் மாதவன், ஊராட்சி மன்றத் தலைவா் பூபாலன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என அவா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராமத்தினா் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.