தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ராமநாதபுரம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகா் மற்றும் சக்கரக்கோட்டை, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகா் மற்றும் சக்கரக்கோட்டை, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் உள்ள நகா் பிரிவில் உயா் மின்பாதை பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜூன் 4) நடைபெறுகின்றன. இதனால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் சக்கரக்கோட்டை, ராமநாதபுரம் நகா் சின்னக்கடைத் தெரு, புலிக்காரத் தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகள், கேணிக்கரைப் பகுதிகள், வண்டிக்காரத்தெரு, தங்கப்பாநகா், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கீழக்கரை துணை மின்நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி பிரிவில் மின்பாதைப் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் காஞ்சிரங்குடி, கோரைக் கூட்டம், கல்லகுளம், செங்கல்நீரோடை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் நாகாச்சிப் பிரிவில் மின்பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, கிழக்குக் கடற்கரைச் சாலை குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகள், சக்கரக்கோட்டை ஆயுதப்படைப் பிரிவு மைதானப்பகுதிகள், ஆதம்நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.