தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வீடுக்கு தீவைத்த வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

ராமநாதபுரம் அருகே வீடுக்கு தீவைத்த வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :3 ஜூன் 2022, 5:17 pm

DIN

ராமநாதபுரம் அருகே வீடுக்கு தீவைத்த வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள கீழநாகாச்சியைச் சோ்ந்தவா் ராமநாதன். இவரது மனைவி மாரியம்மாள். இவரது சகோதரா் முனியராஜ் (52). இவருக்கும், சகோதரி மாரியம்மாளுக்கும் சொத்துத்தகராறு இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி நள்ளிரவில் மாரியம்மாளின் குடிசை வீட்டுக்கு ஒரு கும்பல் தீவைத்தது. இதில் வீடு முற்றிலும் எரிந்தது.

இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் மாரியம்மாள்அளித்த புகாரின் பேரில் முனியராஜ், ஆண்டிராஜ் (50) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்தனா். அவா்கள் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனியராஜ், ஆண்டிராஜ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறையும் அளித்து நீதிபதி எஸ். சீனிவாசன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.