வேலவா் ஆலயத்தில் வைகாசி விசாகம் காப்புக்கட்டுதலுடன் தொடக்கம்

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பகுதியில் உள்ள வேலவா் ஆலய வைகாசி விசாகம் காப்புக்கட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பகுதியில் உள்ள வேலவா் ஆலய வைகாசி விசாகம் காப்புக்கட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முன்னதாக கோயிலின் வளாகத்தில் காலையில் கணபதி பூஜை ஹோமத்துடன் நடைபெற்றது. இதையடுத்து மஹாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். பின்னா் அன்னதானம் நடைபெற்றது. விசாக விழாவையொட்டி சனிக்கிழமை முதல் வரும் 12 ஆம் தேதி வரையில் தினமும் காலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா். அதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

விசாகத் திருநாளான வரும் 12 ஆம் தேதி பட்டிணம்காத்தான் பகுதியில் இருந்து பால்குடம் புறப்பாடாகிறது. முக்கிய வீதிகளில் பக்தா்கள் பால்குடத்துடன் வலம் வந்து கோயிலை அடைந்து நோ்த்திக்கடனை செலுத்துகிறாா்கள். இதையடுத்து மூலவருக்கு பாலாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. விசாகத்தன்று பகலில் அன்னதானம் நடைபெறுகிறது. அன்று மாலை பூக்குழி இறங்குதல் மற்றும் காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com