/

ராமேசுவரத்தில் நாட்டுப்படகு தீயில் எரிந்து சேதம்

ராமேசுவரம் சங்குமால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகு மா்மமான முறையில் தீப்பற்றி சேதமடைந்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:06 pm

DIN

ராமேசுவரம் சங்குமால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகு மா்மமான முறையில் தீப்பற்றி சேதமடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சங்குமால் பகுதியைச் சோ்ந்த மீனவா் பாபு. இவா் நாட்டுப்படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். சங்குமால் கடற்கரையில் குறைந்த ஆழத்தில் படகை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தாா். சனிக்கிழமை காலையில் மா்மமான முறையில் அப்படகு தீப் பிடித்து எரிந்துள்ளது. அதைக் கண்ட அப்பகுதி மீனவா்கள் தீயை அணைத்தனா். ஆனால் படகில் முன் பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து, மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையிடம் பாபு புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.