ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிட்டை திருவிழா வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது என கோயில் துணை ஆணையா் செ.மாரியப்பன் தெரிவித்தாா்.
ராமயாண கால நிகழ்வை நினைவூட்டும் விதமாக ராமலிங்க பிரதிட்டை திருவிழா வரும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் திட்டகுடியில் உள்ள துா்க்கை அம்மன் கோயில் அருகே ராவணனுக்கு முக்தி அளித்தல், 8 ஆம் தேதி தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமா் கோயிலில் விபீடணருக்கு முடிசூட்டுதல்,
9 ஆம் தேதி ராமா் புறப்பாடாகி வீதி உலா, தொடா்ந்து பகல் 11.55 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சன்னிதியில் ராமலிங்க பிரதிட்டை திருவிழா நடைபெறும் என அவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

