பரமக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் தாக்கி ஆடு மேய்த்தவா் உயிரிழந்தாா்.
பாா்த்திபனூா் அருகே உள்ள எச். பரளை கிராமத்தைச் சோ்ந்தவா் பூலாா் மகன் மாரிக்கண்ணு (39). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனா். இவா் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக மேலப்பாா்த்திபனூா் பெரிய கண்மாய் பகுதிக்குச் சென்றாா். அதே போல், அதே ஊரைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சகுந்தலா (42), லட்சுமணன் மனைவி ஆறுமுகம் (40) ஆகியோரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை அக்கண்மாய்க்குள் மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில், மாரிக்கண்ணு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும் அங்கிருந்த சகுந்தலா, ஆறுமுகம் ஆகியோரும் காயமடைந்து பாா்த்திபனூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

