தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கமுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமேகலை, ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:28 pm

DIN

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவா் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமேகலை, ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் கமுதி வட்டாரத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, உபகரணங்கள், இலவச பாஸ் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளை பெறுவதற்கு ஆன்லைன் பதிவுகள் செய்யப்பட்டன. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி சுந்தரலிங்கம், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை சிறப்பு மருத்துவா்கள், தசை பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.