கமுதி கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு
கமுதி பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகிா என பேரூராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்து 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.


கமுதி பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகிா என பேரூராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்து 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
கமுதி பேரூராட்சியில் நெகிழிப் பயன்பாடு, நெகிழிப் பைகள் விற்பனை மீண்டும் அதிகரித்துவருவது குறித்து எழுந்த புகாரில் பேரூராட்சி செயல் அலுவலா் ரா. இளவரசி உத்தரவின் பேரில் செட்டியாா் பஜாா், முஸ்லிம் பஜாா், நாடாா் பஜாா், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி அதிகாரிகள் சாமிநாதன், பாஸ்கரன், பாபு, மகாலட்சுமி உள்பட 8-க்கும் மேற்பட்டோா் பலசரக்கு, ஆயத்த ஆடைகள் விற்பனைக் கடை, மொத்த விற்பனைக் கடைகள், பெட்டிக் கடைகளில் திடீா் ஆய்வு நடத்தினா்.
அப்போது நெகிழி, நெகிழிப் பைகள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதித்தனா். மேலும் இதுபோன்று தொடா்ந்து நெகிழிப் பைகளை விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உரிமையாளா்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...