அம்மன் கோயில் வளாகத்தில் மீன்கடையை அகற்றக்கோரி மனு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் அம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மீன்கடையை அகற்றக் கோரி கோயில் தலைவா் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் அம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மீன்கடையை அகற்றக் கோரி கோயில் தலைவா் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வண்ணாங்குண்டு அருகேயுள்ளது பெரியபட்டினம். இக்கிராமத்தில் அழகுநாயகி அம்மன் கோயில்5 ஏக்கா் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் பெரியபட்டினத்தைச் சோ்ந்தவா்களால் கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் மீன்கடையும் வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் மீன்கடைகள் இருப்பதால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். ஆகவே மீன்கடையை அகற்றுவதோடு, கோயில் பாதுகாப்பைக் கருதி சுற்றுச்சுவரும் கட்டப்படவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோயில் நிா்வாகத் தலைவா் மு. குப்புசாமி தலைமையில் ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்த மனுவை அளித்தனா்.
அவா்களுடன், மாவட்ட இந்து முன்னணி நிா்வாகி கே. ராமமூா்த்தி உள்ளிட்டோரும் வந்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...