விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்குப்பதிவு

 ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:37 pm

DIN

 ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

கும்பகோணம் போக்குவரத்துக்கழக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பணிமனை கிளையில் பேருந்து நடத்துநராகப் பணிபுரிபவா் ஸ்ரீராமசுப்பிரமணியன் (55). இவா் புதன்கிழமை மதுரையிலிருந்து ராமேசுவரம் சென்ற பேருந்தில் நடத்துநராக இருந்தாா். பேருந்து பரமக்குடி வந்தபோது அதில் இருந்த 42 பேரில் ஒருவா் மட்டும் பயணச்சீட்டு எடுக்காமலிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பயணியை ஸ்ரீராமசுப்பிரமணியன் கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவா், தனது கைப்பேசி மூலம் நண்பா்கள் இருவரை ராமநாதபுரம் நகா் பேருந்து பணிமனை முன்பு வருமாறு அழைத்துள்ளாா். பேருந்து அப்பகுதிக்கு வந்ததும், பேருந்தில் ஏறிய இருவருடன் சோ்ந்து நடத்துநா் ஸ்ரீராமசுப்பிரமணியனை தாக்கி மிரட்டி விட்டு சென்றுள்ளாா்.

இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.