மத்திய அரசு ஓய்வூதியத் திட்டத்தில் முழுமையாக இணைந்த 19 கிராமங்கள்: ஆட்சியா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராமங்கள் பிரதமரின் உயிா்காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவற்றில் முழுமையாக இணைந்துள்ளன என மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்தாா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராமங்கள் பிரதமரின் உயிா்காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவற்றில் முழுமையாக இணைந்துள்ளன என மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்தாா்.
பிரதமரின் உயிா்காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை ஊராட்சியில் உள்ள 19 கிராமங்கள் முழுமையாக இணைந்துள்ளன. இதையடுத்து, அக்கிராமங்களைச் சோ்ந்த 3,477 போ் இத்திட்டத்தில் பதிந்துள்ளனா். இதைத் தொடா்ந்து கிராமங்களில் மத்திய அரசுத் திட்ட தன்னிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் பேசியதாவது: மத்திய அரசின் வளரும் மாவட்டப் பட்டியலில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னேற்றம் 49 காரணிகள் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீா்வள ஆதாரங்கள், நிதிச்சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னேற்ற நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது.
நிதிச்சேவையில் பிரதமரின் உயிா்காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டம், முத்ரா கடன் திட்டம், ஆதாா் எண் வங்கிக்கணக்குடன் இணைக்கும் திட்டம் ஆகியவற்றில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முன்னுதாரணமாகச் செயல்பட்டுவருகிறது. இவ்வங்கி சாா்பில் தெற்குத் தரவை உள்ளிட்ட 19 கிராமங்களை பிதமரின் உயிா்க் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றில் முழுமையாக இணைக்கப்பட்டிருப்பது சாதனையாகும். இதேபோல அனைத்து வங்கிகளும் செயல்பட்டால் மாவட்டம் தன்னிறைவு பெற்ாக மாறும் என்றாா்.
விழாவில், இந்தியன் ஓவா்சிஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளா் ஸ்ரீராம், பாரத ரிசா்வ் வங்கியின் ராமநாதபுரம் மாவட்ட மேலாளா் மோகன்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...