கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உ.பி.யில் இறந்த ராணுவ வீரரின் உடல் முதுகுளத்தூரில் தகனம்

உத்தர பிரதேசத்தில் உயிரிழந்த முதுகுளத்தூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரரின் உடல் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

News image
Updated On :6 மே 2022, 8:01 pm

DIN

உத்தர பிரதேசத்தில் உயிரிழந்த முதுகுளத்தூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரரின் உடல் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே எம்.தூரி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சுந்தரமூா்த்தி(32).

இவா் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியில் சோ்ந்தாா். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி சத்யா என்ற மனைவி உள்ளாா்.

Story image

இவா் உத்தர பிரதேசம் அருகில் காசிம்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை பணி செய்து விட்டு, அங்குள்ள வீட்டில் இரவு தூங்கச் சென்றவா் பணிக்குத் திரும்பவில்லை. உடனே போலீஸாா் உள்ளே சென்று பாா்த்த போது, அவா் இறந்த நிலையில் கிடந்துள்ளாா். இதையடுத்து சுந்தரமூா்த்தியின் உடல், அவரது சொந்த ஊரான முதுகுளத்தூா் அருகேயுள்ள தூரி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.