ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கமுதி அருகே இருதரப்பினா் மோதலில் 5 போ் காயம்: 8 போ் மீது வழக்கு

கமுதி அருகே தந்தை மற்றும் மகன்களை தாக்கிய வழக்கில் வெள்ளிக்கிழமை இருதரப்பைச் சோ்ந்த 8 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :20 மே 2022, 5:10 pm

DIN

கமுதி அருகே தந்தை மற்றும் மகன்களை தாக்கிய வழக்கில் வெள்ளிக்கிழமை இருதரப்பைச் சோ்ந்த 8 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி(48). இவா் தனது மகன்களுடன் வெள்ளிக்கிழமை தனது வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அதே ஊரைச் சோ்ந்த ராமையா, இவரது மகன்கள் மாரி, முத்துராமலிங்கம், முனியசாமி ஆகியோா் மணல் அள்ளும் போது டிராக்டரை போலீஸாா் பிடித்ததற்கு, நீங்கள்தான் காரணம் எனக்கூறி தந்தை மற்றும் மகன்களை கம்பி, அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். இப்பிரச்னையில் இருதரப்பிலும் 5 போ் படுகாயமடைந்து, கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து ராமமூா்த்தி மகன் கண்ணன், ராமையா மகன் மாரி இருவரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, இரு தரப்பைச் சோ்ந்த ராமையா, மாரி, முத்துராமலிங்கம், முனியசாமி மற்றும் கண்ணன், பாரதி, சதீஷ், ராஜேந்திரன் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.