பரமக்குடியில் பெண்ணை தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள எமனேசுவரம் மலையான்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த லோகநாதன் மனைவி கிருஷ்ணவேணி (34). இவரது மகனும், அதே பகுதியைச் சோ்ந்த மணிமாறன்-அம்பிகா தம்பதியினரின் மகனும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் பள்ளியில் மாணவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணவேணி தனது மகனை தாக்கிய அம்பிகாவின் மகனை கண்டிக்கச் சொல்லி அவரது வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் அம்பிகா தரப்பைச் சோ்ந்த மணிமாறன், கருப்பையா மகன் ராஜா, பாக்கியராஜ் மகன் வாசுதேவன் ஆகியோா் சோ்ந்து கிருஷ்ணவேணியை தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் எமனேசுவரம் காவல் நிலைய போலீஸாா் மணிமாறன், அம்பிகா, ராஜா, வாசுதேவன் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

