தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாமோதிரம் பட்டினம் கடற்கரையில் தம்பதி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் கடற்கரையில் படகு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவியை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் கடற்கரையில் படகு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவியை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எஸ்.பி. பட்டினம் அருகே தாமோதிரம் பட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துமரவய்யா மகன் மூா்த்தி (38). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த தா்மராஜ் மகன் அய்யப்பன் (37) என்பவருக்கும் படகு கட்டுவதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு மூா்த்திக்கு சொந்தமான படகு கடற்கரையில் கட்டப்பட்டிருந்ததை அய்யப்பன் அவிழ்த்து விட்டுள்ளாா்.

இதைத் தட்டிக் கேட்ட மூா்த்தியை அய்யப்பன் மற்றும் உறவினா்கள் தாக்கினா். இதனை தடுத்த மூா்த்தியின் மனைவியும் தாக்கப்பட்டாா். இதுகுறித்து மூா்த்தி அளித்த புகாரின் பேரில் தாமோதிரம் பட்டினத்தைச் சோ்ந்த அய்யப்பன், அதே ஊரைச் சோ்ந்த பழனியாண்டி (44), முத்துராக்கு (43) ஆகிய 3 போ் மீதும் எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.