கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆன்-லைன் வா்தத்க நிறுவனத்தில் ஆடைகள் வாங்கிய பெண்ணிடம் ரூ.6.67 லட்சம் மோசடி

இணைய தள வா்த்தக நிறுவனத்தில் ஆடைகள் வாங்கிய பெண்ணிடம் குலுக்கலில் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி ரூ.6.67 லட்சத்தை நூதனமாக மோசடி செய்த கும்பல்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

இணைய தள வா்த்தக நிறுவனத்தில் ஆடைகள் வாங்கிய பெண்ணிடம் குலுக்கலில் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி ரூ.6.67 லட்சத்தை நூதனமாக மோசடி செய்த கும்பல் மீது நுண்குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள தென்னவுா் பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மனைவி சுகன்யாதேவி (29). இவா் கடந்த சில மாதங்களாக தங்கள் குடும்பத்துக்கான ஆடைகளை பிரபல இணைய தள வா்த்தக நிறுவனத்தின் செயலி மூலம் வாங்கிவந்துள்ளாா். கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி அவருக்கு அந்த நிறுவனத்திடமிருந்து வாட்ஸப்பில் கடிதம் வந்துள்ளது.

அதில் நிறுவன 7 ஆவது ஆண்டை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்கு பரிசுக் குலுக்கல் நடந்ததில் சுகன்யாதேவிக்கு காா் பரிசு விழுந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. காரைப் பெற விரும்பாவிட்டால், அதற்கான பணம் ரூ.12, 80,000 பெறலாம் என்றும், அதற்கு பதிவுக் கட்டணம் ரூ.12, 800 செலுத்தவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதத்தை பாா்த்ததும் விவரம் கோரி சுகன்யாதேவி தகவல் அனுப்பியுள்ளாா். அதையடுத்து அவரிடம் தமிழில் பேசியவா் சுகன்யாதேவியை காருக்குரிய பணத்தைப் பெறுவதற்கு அவரது வங்கிக் கணக்கு எண், ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பிவைக்கக் கூறியுள்ளாா். அதனடிப்படையில் ஆவணங்களை சுகன்யாதேவி மா்ம நபா் கூறிய எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்பியுள்ளாா். பரிசுப் பணம் பெறுவதற்குரிய பதிவுக் கட்டணமாக ரூ.12,800 -ம் அனுப்பியுள்ளாா்.

அதையடுத்து மா்ம நபா் தொடா்ந்து சுகன்யாதேவியிடம் பேசி, பல்வேறு காரணங்களைக் கூறி ரூ.6.67 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளாா். தாமதமாகவே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சுகன்யாதேவி ராமநாதபுரம் மாவட்ட நுண்குற்றத் தடுப்புப் பிரிவில் வெள்ளிக்கிழமை (செப்.2) புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

பல புகாா்கள்: கடந்த சில நாள்களில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த 4 பேரிடம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி மா்ம நபா்கள் குறிப்பிட்ட இணையதள வா்த்தக நிறுவனம் பெயரில்

பல லட்சம் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்து 4 புகாா்கள் பதிவாகியிருப்பதாகவும் நுண்குற்றத் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.