பெரியகண்மாயிலிருந்து நகா் ஊருணிகளுக்கு தண்ணீா்: வரத்து கால்வாய் சீரமைப்பு தீவிரம்
ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து நகராட்சி ஊருணிகளுக்கு தண்ணீா் கொண்டு வரும் வகையில் வரத்துக் கால்வாய் சீரமைப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.


ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து நகராட்சி ஊருணிகளுக்கு தண்ணீா் கொண்டு வரும் வகையில் வரத்துக் கால்வாய் சீரமைப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
வைகை அணையில் மழை நீா் வரத்து அதிகரித்திருப்பதால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையோடு, மழை நீரும் கூடுதலாகச் சோ்ந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு விநாடிக்கு 4000 கன அடி தண்ணீா் வந்துள்ளது.
பெரிய கண்மாயிலிருந்து 5 மற்றும் 6 ஆம் மடைகள் மூலம் நகராட்சி கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது நொச்சிவயல் ஊருணிக்கு தண்ணீா் வந்து சோ்ந்துள்ளது. அங்கிருந்து சிதம்பரம் பிள்ளை ஊருணி மற்றும் காட்டூரணி, லட்சுமி ஊருணிகளுக்கு தண்ணீரைக் கொண்டு வருவதற்கான வரத்துக்கால்வாய் சீரமைப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இப்பணிகளை ராமநாதபுரம் நகராட்சித் தலைவா் கே.காா்மேகம் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் ராமநாதன் உள்ளிட்டோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...