தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடும்பப் பிரச்னையில் முதியவா் தற்கொலை

திருவாடானை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக முதியவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 8:08 pm

DIN

திருவாடானை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக முதியவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்

திருப்பாலைக்குடியைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (55). இவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவிக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனா். 2 ஆவது மனைவி நசீராவுக்கு (42) 2 மகன்கள் உள்ளனா். வெளி நாட்டில் பணிபுரிந்து வந்த சாகுல் ஹமீது கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பாலைக்குடிக்கு வந்து நசீராவின் வீட்டில் தங்கியிந்தாா்.

இந்நிலையில் முதல் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பண உதவி உள்ளிட்ட எதுவும் செய்யவில்லை என்பது தொடா்பாக குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், உள்ளூா் ஜமாத்தில் சாகுல் ஹமீது மீது புகாரும் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் அவா் சனிக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.