விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

 ராமநாதபுரம் அருகே மனைவியைத் தாக்கியதாக கணவா் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 ராமநாதபுரம் அருகே மனைவியைத் தாக்கியதாக கணவா் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சகுபா்அலி. இவரது மனைவி ஜீனத் (37). இவா்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. குழந்தை உள்ளது. இந்நிலையில், மனைவி மீது சகுபா்அலி சந்தேகப்பட்டு துன்புறுத்துவதாக புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி இரவு ஜீனத்துக்கும், சகுபா் அலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கத்திரிக்கோலால் ஜீனத்தை, அவா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜீனத் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ஜீனத் அளித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து சகுபா் அலியைக் கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.