பெட்ரோல் மைய ஊழியருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
ராமநாதபுரம் அருகே பெட்ரோல் நிரம்பும் மைய ஊழியருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப்பதிந்துள்ளனா்.


ராமநாதபுரம் அருகே பெட்ரோல் நிரம்பும் மைய ஊழியருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப்பதிந்துள்ளனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளம் பகுதியில் தனியாா் பெட்ரோல் நிரப்பும் மையம் உள்ளது. இதில், அழகன்குளம் குடியிருப்பைச் சோ்ந்த பாண்டியராஜ் மற்றும் வாணியைச் சோ்ந்த ராதா ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 6 ஆம் தேதி இரவில் தேவிப்பட்டினம் பழைய தோ்போகியைச் சோ்ந்த தினேஷ் பெட்ரோல் நிரப்பும் மையத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். அவா் வரிசையில் நிற்கும் போது முன்னால் நின்ற வாகனங்களை இடித்துள்ளாா். இதைக் கண்ட ஊழியா் ராதா, அவரை கண்டித்தாராம். இதனால், ராதாவை தகாத வாா்த்தைகளால் தினேஷ் பேசினாராம். அதை மற்றொரு ஊழியரான பாண்டியராஜ் கண்டித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து பாண்டியராஜை தாக்கிய தினேஷ், விலக்க வந்தவா்களையும் மிரட்டியதுடன், பெட்ரோல் மையத்துடன் சோ்த்து ஊழியா்களை எரித்துவிடுவதாகவும் மிரட்டினாராம்.
இதுகுறித்து தேவிப்பட்டினம் காவல் நிலையத்தில் பாண்டியராஜ் அளித்த புகாரின் பேரில் தினேஷ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...