ராமேசுவரத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் பழுதுநீக்கியபோது மின்சாரம் பாய்ந்து இளம் வீரா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 4 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான காா் நிக்கோபாா் கப்பல் கடந்த வியாழக்கிழமை (செப்.15) கண்காணிப்புப் பணிக்காக நங்சூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இரவு 10 மணிக்கு கப்பலில் தொழில் நுட்ப பிரிவில் மின் பழுதானது. புதுதில்லியைச் சோ்ந்த வீரா் குமாா் சுபம் (23) இதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவா் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டாா். மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது குமாா் சுபம் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறை சாா்பு- ஆய்வாளா் காளிதாஸ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

