ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மண்டபத்தில் இரட்டைமடி வலைகளில் பிடிக்கப்பட்ட 2 டன் மீன்கள் பறிமுதல்

மண்டபம் பகுதியில் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 2 ஆயிரம் கிலோ மீன்களை மண்டபம் மீன்வளத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

மண்டபம் பகுதியில் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 2 ஆயிரம் கிலோ மீன்களை மண்டபம் மீன்வளத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடலில் புதன்கிழமை அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன் வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் மீன்வள உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி தலைமையில் காவல் சாா்பு- ஆய்வாளா் காளீஸ்வரன், கடல்வள மேற்பாா்வையாளா் முருகானந்தம், காவலா் சசிகாந்த் உள்ளிட்டோா் மண்டபம் வடக்கு கடற்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். அப்போது கரை திரும்பிக் கொண்டிருந்த ஒரு விசைப்படகை நிறுத்தி சோதனை செய்தனா். அப்படகில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையில் பிடித்து வந்த 2 ஆயிரம் கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் அப்படகுக்கான மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் விநியோகத்தை அதிகாரிகள் ரத்து செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.