கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குறுவட்ட தடகளம்: முதுகுளத்தூா் பள்ளி தொடா்ந்து 25 ஆண்டுகளாக சாம்பியன்

முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் குறுவட்ட தடகளப் போட்டியில் தொடா்ந்து 25 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் குறுவட்ட தடகளப் போட்டியில் தொடா்ந்து 25 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தொடா்ந்து 25 ஆண்டுகளாக குறு வட்ட தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

முதுகுளத்தூா் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் அண்மையில் குறுவட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 14,17,19 வயது ஆகிய மூன்று பிரிவுகளிலும் அதிகப் புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா். முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் கமால்பாட்சா, முகம்மது உசேன், அன்சாரி மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியா் முகம்மது சுல்தான் அலாவுதீன், கல்விக்குழு உறுப்பினா்கள்,ஜமா அத் தலைவா்கள் பாராட்டினா். இப் பள்ளி தொடா்ந்து 25 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.