மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ராமநாதபுரத்தில் வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் போராட்டம்: 300 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் கடந்த முறை பருவமழை பொய்த்ததால், நெல் பயிா்கள் கருகின. இதனால், தமிழக அரசு வறட்சி நிவரணம் வழங்கக் கோரி விவசாய சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் விவசாயிகள் சங்கத்தினா் வறட்சி நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜு அவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

மேலும், ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தமிழக அரசு வறட்சி நிவாரணம் அறிவிக்கும் வரை போராட்டதைக் கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.