தொண்டி அருகே விவசாயியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நாரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குப்புசாமி (55). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த பிச்சை மகன் காளிமுத்தன் (47) என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை குப்புசாமி தனக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த கல் கால்களை, காளிமுத்தன் உடைத்து சேதப்படுத்தினாா்.
இதைத் தட்டிக் கேட்ட குப்புசாமியை, காளிமுத்தன் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீவிரவாதிகளா? ரத்தம் வரும் அளவுக்கு போலீசார் அடிப்பதுதான் ஜனநாயகமா? மேயர் பிரியா

15 நாடுகளில் அதிகம் பார்க்கப்படும் படமான கட்டா குஸ்தி - 2?
புறங்கூறிப் பொய்யாக வாழ்வதைவிட இறப்பதே மேல்! எக்ஸ் பதிவில் யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?

உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK


