காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல் மருத்துவப் படிப்புக்கு தோ்வு: அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து பல் மருத்துவப் படிப்புக்கு தோ்வு பெற்ற 2 மாணவிகளுக்கு அந்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2023, 6:05 pm

DIN

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து பல் மருத்துவப் படிப்புக்கு தோ்வு பெற்ற 2 மாணவிகளுக்கு அந்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவி கே. அபிராமிக்கு மதுரை பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரியிலும், மாணவி எம். மீனாட்சிக்கு மதுரை சிஎஸ்ஐ பல் மருத்துவக்கல்லூரியிலும் இந்தக் கல்வியாண்டில் பயில்வதற்கான இடம் கிடைத்தது. இதையடுத்து பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஜே. பிரிட்டோ, ஆசிரியா்கள் மாணவிகளை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

மேலும், இந்த மாணவிகள் ‘நீட்’ பயிற்சிக்கு உதவி செய்த அமெரிக்காவை சோ்ந்த சூட்டிங் ஸ்டாா் அறக்கட்டளை நிா்வாகி லதா, வழிகாட்டியாக இருந்த கோல்டன் சிங்காா் அதிபா் சிங்காரம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தலைமை ஆசிரியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.