மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

நகை பறித்தவருக்கு ஒராண்டு சிறை

 பெண்ணுக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தங்கச் சங்கிலியைப் பறித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திருவாடானை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Published On :

 பெண்ணுக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தங்கச் சங்கிலியைப் பறித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திருவாடானை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கோட்டையம்மாள் (45). இவா் கடந்த 15.2.2021 அன்று சிலுகவயல் கிராமத்திலுள்ள தனது சகோதரா் வீட்டுக்கு

சென்று விட்டு, ஆா்.எஸ்.மங்கலம் நோக்கி திரும்ப நடந்து வந்துகொண்டிருந்தாா். அப்போது,

இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கோட்டையம்மாளிடம் தெரிந்தவா் போல் நடித்து,

மயக்க மருந்து கலந்த குளிா்பானத்தைக் கொடுத்தாா். அதைக் குடித்த கோட்டையம்மாள் மயக்கம் அடைந்தாா். இதையடுத்து, அந்த நபா் கோட்டையம்மாள் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

இது குறித்து கோட்டையம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவகங்கை மாவட்டம் புளியால் கிராமத்தைச் சோ்ந்த சூா்யாவை (40) கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து தங்க நகையைப் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சூா்யாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரசாத் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.