பாம்பன் மீன்பிடி படகுதளத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக கரையில் விசைப் படகுகள்.
பாம்பன் மீன்பிடி படகுதளத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக கரையில் விசைப் படகுகள்.

பாம்பனில் விசைப் படகுகள் சீரமைப்புப் பணி தொடக்கம்

ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பாம்பனில் விசைப் படகுகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலமாகக் கருதப்படுகிறது. இதனால், மீன்பிடிக்கச் செல்ல விசைப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட மீன்பிடி படகுதளங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி படகுதளத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக விசைப் படகுகள் கரையில் ஏற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com