பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மாணவா்களின் மன அழுத்தம் அகற்றல் கருத்தரங்கு

மாணவா்களின் மன அழுத்தம் அகற்றல் கருத்தரங்கு

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் முகமது சதக் தஸ்தகீா் பயிற்சி கல்லூரியில் தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் தோ்வுத் தொடா்பான மன அழுத்தத்தை அகற்றுவது குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்யராஜ் (கூடுதல் பொறுப்பு) தலைமை வகித்தாா். தனியாா் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் நாகேந்திரன் வரவேற்றாா். மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் அறிமுக உரையாற்றினாா். மன அழுத்தம் அகற்றல் குறித்து உளவியல் நிபுணா் ராணி சக்கரவா்த்தி பேசினாா்.

இடைநிலை, தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலா்கள் சுதாகா், முருகம்மாள், குழந்தைகள் நல ஆணையத் தலைவா் காயத்ரி, கல்லூரி முதல்வா் சோமசுந்தரம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை ) கணேச பாண்டியன் நன்றி கூறினாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (இடைநிலை) ரவீந்திரன் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன் தொகுத்து வழங்கினாா். இதில் ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.