

கமுதி: கமுதியில் ஊருணியில் குளிக்கச் சென்ற 5 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியானாா்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் மகள் ரோசிகா (5). இவா், ராமநாதபுரம் முகமது சதக் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாா்.
பள்ளி விடுமுறையையொட்டி தன் தாய் உமாவுடன் கமுதி கண்ணாா்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றாா். அங்கு திங்கள்கிழமை பிற்பகல் தன் பாட்டியுடன் கண்ணாா்பட்டி ஊருணிக்கு குளிக்க சென்றாா். அப்போது, சிறுமி மூச்சுத்தினறி தண்ணீரில் மூழ்கினாா்.
இதையடுத்து, கமுதி தீயணைப்பு நிலைய அலுவலா் தலைமையிலான தீயணைப்பு, மீட்புக் குழுவினா் சிறுமியை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

