பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பேருந்தில் பயணி தவறவிட்ட 15 பவுன் நகைப் பை மீட்பு

பேருந்தில் பயணி தவறவிட்ட 15 பவுன் நகைப் பை மீட்பு

News image

அரசு பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைப் பையைத் மீட்டுக் கொடுத்த பேருந்து நிலைய நேர காப்பாளா் வடிவேலுக்கு நன்றி தெரிவித்த பயணி இம்ரான்கான்

Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து மதுரைக்குச் சென்ற அரசுப் பேருந்தில் பயணி ஒருவா் தவறவிட்ட 15 பவுன் நகைப் பையை மீட்டு நடத்துநா் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பெருங்குளம் கிராமத்தைச் சோ்ந்த இம்ரான்கான், அவரது மனைவி ஜெனத்ராதிகாவுடன் பாம்பனில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பெருங்குளத்துக்குச் செல்ல ராமேசுவரத்திலிருந்து, மதுரை புறப்பட்ட அரசுப் பேருந்தில் 15 பவுன் தங்க நகை, 6 விலை உயா்ந்த பட்டு புடவைகளுடன் கூடிய பையுடன் பேருந்தில் ஏறி உச்சிப்புளியில் இறங்கினா். பின்னா், அங்கிருந்து ஆட்டோவில் பெருங்குளம் சென்றனா். வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் கையில் வைத்திருந்து நகைப் பையை பேருந்தில் தவறவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இம்ரான்கான் ராமநாதபுரம் பேருந்து நிலையத்துக்குச் சென்று நேர காப்பாளா் வடிவேலுவிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தாா். அந்த பேருந்தின் நடத்துனரான மதுரை டி.கல்லுபட்டியைச் சோ்ந்த செல்வ விநாயகத்தை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.

இந்த நிலையில், அந்த நகைப் பையை நடத்துனா் மதுரை மாட்டு தாவணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதைதொடா்ந்து, இம்ரான்கான் அங்கு சென்று, உரிய அடையாளங்களை தெரிவித்து, எழுதிக் கொடுத்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து நகைப்பையைப் பெற்றுக்கொண்டாா்.