வாக்களித்த வீடியோ வைரல்: இளைஞா் மீது வழக்குப் பதிவு
வாக்களித்த வீடியோ வைரல்: இளைஞா் மீது வழக்குப் பதிவு


கமுதி: சாயல்குடி அருகே கடந்த மக்களவைத் தோ்தலில் ஓட்டு போட்டு விட்டு இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் கடந்த ஏப்.19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட முதுகுளத்தூரை அடுத்த காவாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, காவாகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராஜகுமாரன் (28) வாக்குச்சாவடி மையத்துக்குள் தடையை மீறி செல்போன் எடுத்துச் சென்று வாக்கு செலுத்தியதற்கான ஆதாரத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டாா்.
இதையடுத்து, ராஜகுமாரன் மீது நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் கீழகிடாரம் கிராம நிா்வாக அலுவலா் ஞானபாண்டி அளித்த புகாரின் பேரில் கீழச்செல்வனூா் காவல் நிலையத்தில் ராஜகுமாரன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...